குறள்: 1233தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.
These withered arms, desertion's pangs abundantly display,That swelled with joy on that glad nuptial day
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)
| குறள் எண்: | 1233 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | உறுப்புநலன் அழிதல் |
| இயல்: | கற்பியல் |