குறள்: 1237பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்வாடுதோட் பூசல் உரைத்து.

My heart! say ought of glory wilt thou gain,If to that cruel one thou of thy wasted arms complain

மு.வரதராசன் உரை

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?

கலைஞர் உரை

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

Explanation

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

Kural Info

குறள் எண்:1237
Category:காமத்துப்பால்
அதிகாரம்:உறுப்புநலன் அழிதல்
இயல்:கற்பியல்