குறள்: 1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.
One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow
| குறள் எண்: | 1238 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | உறுப்புநலன் அழிதல் |
| இயல்: | கற்பியல் |