குறள்: 1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.

As we embraced a breath of wind found entrance there;The maid's large liquid eyes were dimmed with care

மு.வரதராசன் உரை

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?

கலைஞர் உரை

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன

Explanation

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow

Kural Info

குறள் எண்:1239
Category:காமத்துப்பால்
அதிகாரம்:உறுப்புநலன் அழிதல்
இயல்:கற்பியல்