குறள்: 639பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.
A minister who by king's side plots evil thingsWorse woes than countless foemen brings
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்
Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin
| குறள் எண்: | 639 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அமைச்சு |
| இயல்: | அமைச்சியல் |