குறள்: 746எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண்.

A fort, with all munitions amply stored,In time of need should good reserves afford

மு.வரதராசன் உரை

தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

கலைஞர் உரை

போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்

Explanation

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)

Kural Info

குறள் எண்:746
Category:பொருட்பால்
அதிகாரம்:அரண்
இயல்:அரணியல்