குறள்: 748முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண்.

Howe'er the circling foe may strive access to win,A fort should give the victory to those who guard within

மு.வரதராசன் உரை

முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.

கலைஞர் உரை

முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்

Explanation

That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it

Kural Info

குறள் எண்:748
Category:பொருட்பால்
அதிகாரம்:அரண்
இயல்:அரணியல்