குறள்: 421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.

True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy

மு.வரதராசன் உரை

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

கலைஞர் உரை

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்

Explanation

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy

Kural Info

குறள் எண்:421
Category:பொருட்பால்
அதிகாரம்:அறிவுடைமை
இயல்:அரசியல்