குறள்: 430அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.
The wise is rich, with ev'ry blessing blest;The fool is poor, of everything possessed
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing
| குறள் எண்: | 430 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அறிவுடைமை |
| இயல்: | அரசியல் |