குறள்: 724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.
What you have learned, in penetrating words speak out beforeThe learn'd; but learn what men more learn'd can teach you more
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning)
| குறள் எண்: | 724 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அவை அஞ்சாமை |
| இயல்: | அமைச்சியல் |