குறள்: 713அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல்.

Unversed in councils, who essays to speakKnows not the way of suasive words,- and all is weak

மு.வரதராசன் உரை

அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

கலைஞர் உரை

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது

Explanation

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)

Kural Info

குறள் எண்:713
Category:பொருட்பால்
அதிகாரம்:அவை அறிதல்
இயல்:அமைச்சியல்