குறள்: 720அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்அல்லார்முன் கோட்டி கொளல்.
Ambrosia in the sewer spilt, is wordSpoken in presence of the alien herd
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground
| குறள் எண்: | 720 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அவை அறிதல் |
| இயல்: | அமைச்சியல் |