குறள்: 383தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு.

A sleepless promptitude, knowledge, decision strong:These three for aye to rulers of the land belong

மு.வரதராசன் உரை

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

சாலமன் பாப்பையா உரை

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

கலைஞர் உரை

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்

Explanation

These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country

Kural Info

குறள் எண்:383
Category:பொருட்பால்
அதிகாரம்:இறைமாட்சி
இயல்:அரசியல்