குறள்: 388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.
Who guards the realm and justice strict maintains,That king as god o'er subject people reigns
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்
That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).
| குறள் எண்: | 388 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இறைமாட்சி |
| இயல்: | அரசியல் |