குறள்: 1052இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்.
Even to ask an alms may pleasure give,If what you ask without annoyance you receive
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்
Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)
| குறள் எண்: | 1052 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இரவு |
| இயல்: | குடியியல் |