குறள்: 1054இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.

Like giving alms, may even asking pleasant seem,From men who of denial never even dream

மு.வரதராசன் உரை

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

சாலமன் பாப்பையா உரை

ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

கலைஞர் உரை

இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்

Explanation

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

Kural Info

குறள் எண்:1054
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவு
இயல்:குடியியல்