குறள்: 1056கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும்.
It those you find from evil of 'denial' free,At once all plague of poverty will flee
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing
| குறள் எண்: | 1056 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இரவு |
| இயல்: | குடியியல் |