குறள்: 1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.
What glory will there be to men of generous soul,When none are found to love the askers' role
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them)
| குறள் எண்: | 1059 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இரவு |
| இயல்: | குடியியல் |