குறள்: 622வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்.
Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow
| குறள் எண்: | 622 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இடுக்கண் அழியாமை |
| இயல்: | அரசியல் |