குறள்: 627இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல்.

'Man's frame is sorrow's target', the noble mind reflects,Nor meets with troubled mind the sorrows it expects

மு.வரதராசன் உரை

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

சாலமன் பாப்பையா உரை

உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

கலைஞர் உரை

துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்

Explanation

The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble

Kural Info

குறள் எண்:627
Category:பொருட்பால்
அதிகாரம்:இடுக்கண் அழியாமை
இயல்:அரசியல்