குறள்: 925கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.

With gift of goods who self-oblivion buys,Is ignorant of all that man should prize

மு.வரதராசன் உரை

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

கலைஞர் உரை

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்

Explanation

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions)

Kural Info

குறள் எண்:925
Category:பொருட்பால்
அதிகாரம்:கள்ளுண்ணாமை
இயல்:நட்பியல்