குறள்: 926துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

Sleepers are as the dead, no otherwise they seem;Who drink intoxicating draughts, they poison quaff, we deem

மு.வரதராசன் உரை

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

கலைஞர் உரை

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்

Explanation

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters

Kural Info

குறள் எண்:926
Category:பொருட்பால்
அதிகாரம்:கள்ளுண்ணாமை
இயல்:நட்பியல்