குறள்: 1021கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.
Who says 'I'll do my work, nor slack my hand',His greatness, clothed with dignity supreme, shall stand
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது
There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)
| குறள் எண்: | 1021 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | குடிசெயல் வகை |
| இயல்: | குடியியல் |