குறள்: 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.

With blameless life who seeks to build his race's fame,The world shall circle him, and kindred claim

மு.வரதராசன் உரை

குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை

தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

கலைஞர் உரை

குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்

Explanation

People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means

Kural Info

குறள் எண்:1025
Category:பொருட்பால்
அதிகாரம்:குடிசெயல் வகை
இயல்:குடியியல்