குறள்: 1011கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்நல்லவர் நாணுப் பிற.
To shrink abashed from evil deed is 'generous shame';Other is that of bright-browed one of virtuous fame
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids
| குறள் எண்: | 1011 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | நாணுடைமை |
| இயல்: | குடியியல் |