குறள்: 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு.
All spirits homes of flesh as habitation claim,And perfect virtue ever dwells with shame
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection
| குறள் எண்: | 1013 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | நாணுடைமை |
| இயல்: | குடியியல் |