குறள்: 1019குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை.

'Twill race consume if right observance fail;'Twill every good consume if shamelessness prevail

மு.வரதராசன் உரை

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

கலைஞர் உரை

கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்

Explanation

Want of manners injures one's family; but want of modesty injures one's character

Kural Info

குறள் எண்:1019
Category:பொருட்பால்
அதிகாரம்:நாணுடைமை
இயல்:குடியியல்