குறள்: 787அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.
Friendship from ruin saves, in way of virtue keeps;In troublous time, it weeps with him who weeps
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்
(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him)
| குறள் எண்: | 787 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | நட்பு |
| இயல்: | நட்பியல் |