குறள்: 870கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.

The task of angry war with men unlearned in virtue's loreWho will not meet, glory shall meet him never more

மு.வரதராசன் உரை

கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

சாலமன் பாப்பையா உரை

நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

கலைஞர் உரை

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்

Explanation

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)

Kural Info

குறள் எண்:870
Category:பொருட்பால்
அதிகாரம்:பகை மாட்சி
இயல்:நட்பியல்