குறள்: 991எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு.

Who easy access give to every man, they say,Of kindly courtesy will learn with ease the way

மு.வரதராசன் உரை

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

கலைஞர் உரை

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்

Explanation

If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness

Kural Info

குறள் எண்:991
Category:பொருட்பால்
அதிகாரம்:பண்புடைமை
இயல்:குடியியல்