குறள்: 999நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள்.

To him who knows not how to smile in kindly mirth,Darkness in daytime broods o'er all the vast and mighty earth

மு.வரதராசன் உரை

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

கலைஞர் உரை

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்

Explanation

To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light

Kural Info

குறள் எண்:999
Category:பொருட்பால்
அதிகாரம்:பண்புடைமை
இயல்:குடியியல்