குறள்: 892பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும்.

If men will lead their lives reckless of great men's will,Such life, through great men's powers, will bring perpetual ill

மு.வரதராசன் உரை

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

கலைஞர் உரை

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்

Explanation

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils

Kural Info

குறள் எண்:892
Category:பொருட்பால்
அதிகாரம்:பெரியாரைப் பிழையாமை
இயல்:நட்பியல்