குறள்: 895யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.

Who dare the fiery wrath of monarchs dread,Where'er they flee, are numbered with the dead

மு.வரதராசன் உரை

மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

கலைஞர் உரை

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது

Explanation

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go

Kural Info

குறள் எண்:895
Category:பொருட்பால்
அதிகாரம்:பெரியாரைப் பிழையாமை
இயல்:நட்பியல்