குறள்: 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.
The man endowed with greatness true,Rare deeds in perfect wise will do
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do)
| குறள் எண்: | 975 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பெருமை |
| இயல்: | குடியியல் |