குறள்: 531இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soulBring self-forgetfulness than if transcendent wrath control
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy
| குறள் எண்: | 531 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பொச்சாவாமை |
| இயல்: | அரசியல் |