குறள்: 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies

மு.வரதராசன் உரை

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

கலைஞர் உரை

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்

Explanation

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

Kural Info

குறள் எண்:532
Category:பொருட்பால்
அதிகாரம்:பொச்சாவாமை
இயல்:அரசியல்