குறள்: 538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
Let things that merit praise thy watchful soul employ;Who these despise attain through sevenfold births no joy
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை
Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births
| குறள் எண்: | 538 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பொச்சாவாமை |
| இயல்: | அரசியல் |