குறள்: 753பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று.

Wealth, the lamp unfailing, speeds to every land,Dispersing darkness at its lord's command

மு.வரதராசன் உரை

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்

சாலமன் பாப்பையா உரை

பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

கலைஞர் உரை

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

Explanation

The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)

Kural Info

குறள் எண்:753
Category:பொருட்பால்
அதிகாரம்:பொருள் செயல்வகை
இயல்:கூழியல்