குறள்: 754அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்.
Their wealth, who blameless means can use aright,Is source of virtue and of choice delight
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness
| குறள் எண்: | 754 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பொருள் செயல்வகை |
| இயல்: | கூழியல் |