குறள்: 759செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.

Make money! Foeman's insolence o'ergrownTo lop away no keener steel is known

மு.வரதராசன் உரை

ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

கலைஞர் உரை

பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது

Explanation

Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it

Kural Info

குறள் எண்:759
Category:பொருட்பால்
அதிகாரம்:பொருள் செயல்வகை
இயல்:கூழியல்