குறள்: 987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.
What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
| குறள் எண்: | 987 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சான்றாண்மை |
| இயல்: | குடியியல் |