குறள்: 467எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு.

Think, and then dare the deed! Who cry,'Deed dared, we'll think,' disgraced shall be

மு.வரதராசன் உரை

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

கலைஞர் உரை

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு

Explanation

Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly

Kural Info

குறள் எண்:467
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து செயல்வகை
இயல்:அரசியல்