குறள்: 1034பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.

O'er many a land they 'll see their monarch reign,Whose fields are shaded by the waving grain

மு.வரதராசன் உரை

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

கலைஞர் உரை

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்

Explanation

Patriotic farmers desire to bring all other states under the control of their own king

Kural Info

குறள் எண்:1034
Category:பொருட்பால்
அதிகாரம்:உழவு
இயல்:குடியியல்