குறள்: 1040இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.
The earth, that kindly dame, will laugh to see,Men seated idle pleading poverty
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life
| குறள் எண்: | 1040 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | உழவு |
| இயல்: | குடியியல் |