குறள்: 911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்.

Those that choice armlets wear who seek not thee with love,But seek thy wealth, their pleasant words will ruin prove

மு.வரதராசன் உரை

அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.

கலைஞர் உரை

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்

Explanation

The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow

Kural Info

குறள் எண்:911
Category:பொருட்பால்
அதிகாரம்:வரைவின் மகளிர்
இயல்:நட்பியல்