குறள்: 914பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்.

Their worthless charms, whose only weal is wealth of gain,From touch of these the wise, who seek the wealth of grace, abstain

மு.வரதராசன் உரை

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

கலைஞர் உரை

அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்

Explanation

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches

Kural Info

குறள் எண்:914
Category:பொருட்பால்
அதிகாரம்:வரைவின் மகளிர்
இயல்:நட்பியல்