குறள்: 915பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.

From contact with their worthless charms, whose charms to all are free,The men with sense of good and lofty wisdom blest will flee;

மு.வரதராசன் உரை

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

சாலமன் பாப்பையா உரை

இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

கலைஞர் உரை

இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்

Explanation

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights

Kural Info

குறள் எண்:915
Category:பொருட்பால்
அதிகாரம்:வரைவின் மகளிர்
இயல்:நட்பியல்