குறள்: 565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து.

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;His ample wealth shall waste, blasted by demon's glance

மு.வரதராசன் உரை

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா உரை

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

கலைஞர் உரை

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்

Explanation

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil

Kural Info

குறள் எண்:565
Category:பொருட்பால்
அதிகாரம்:வெருவந்த செய்யாமை
இயல்:அரசியல்