குறள்: 653ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅதும் என்னு மவர்.

Who tell themselves that nobler things shall yet be wonAll deeds that dim the light of glory must they shun

மு.வரதராசன் உரை

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கலைஞர் உரை

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்

Explanation

Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)

Kural Info

குறள் எண்:653
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத் தூய்மை
இயல்:அமைச்சியல்