குறள்: 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்.
Though troubles press, no shameful deed they do,Whose eyes the ever-during vision view
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)
| குறள் எண்: | 654 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | வினைத் தூய்மை |
| இயல்: | அமைச்சியல் |